மரத்தில் மோதி தீப்பிடித்து எரிந்த கார்: புதுமண தம்பதி உள்பட 4 பேர் உடல்கருகி பலி
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு புதுமண தம்பதி உள்பட 4 பேர் காரில் திரும்பி வந்துகொண்டிருந்தனர்.
போபால்,
மத்தியபிரதேச மாநிலம் ஹர்டா மாவட்டம் வர்கலா சர்ஹிடா கிராமத்தை சேர்ந்த புதுமண தம்பதி உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் நேற்று இரவு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சிஹொரா பகுதிக்கு சென்றுள்ளனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு இன்று அதிகாலை 4 பேரும் காரில் வந்துகொண்டிருந்தனர். பொர்ஹர்னி என்ற கிராமப்பகுதியில் கார் வந்தபோது எதிர்பாராத விதமாக சாலையோரம் உள்ள மரத்தில் வேகமாக மோதியது.
இந்த கோர விபத்தில் கார் உடனடியாக தீப்பற்றி எரிந்தது. இதனால் காரில் இருந்து யாராலும் வெளியே வரு முடியாவில்லை. இந்த சம்பவத்தில் காரில் இருந்த புதுமண தம்பதி உள்பட 4 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.