புதிய வகை கொரோனா எதிரொலி - சர்வதேச விமான பயணிகளுக்கு கட்டாய பரிசோதனை

கொரோனா எதிரொலியால் சர்வதேச விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது

Update: 2022-12-22 16:44 GMT

Image Courtesy : PTI

புதுடெல்லி,

சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் திடீர் எழுச்சி பெற்று பரவி வருகிறது. இதற்கு காரணம், ஒமைக்ரானின் பிஎப்.7 துணை வைரஸ்கள்தான். இந்த வைரஸ் பிஏ.5.2.1.7 வைரஸ் போன்றுதான் என சொல்லப்படுகிறது. இந்த வைரஸ் அதிவேகமாக பரவுகிற தன்மையைக் கொண்டுள்ளது. இந்த வைரஸ், சீனாவில் மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகளிலும் பரவி விட்டது. இந்த பிஎப்.7 வைரஸ், இந்தியாவிலும் நுழைந்துவிட்டது. குஜராத்தில் கடந்த அக்டோபர் மாதம் 2 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை குஜராத் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் கண்டறிந்துள்ளது. ஒடிசாவிலும் அந்த வைரஸ் ஒருவருக்கு பாதித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 3 பேரை இந்த வைரஸ் பாதித்துள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில் கொரோனா எதிரொலியால் சர்வதேச விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் சர்வதேச விமானங்களில் வரும் பயணிகளை இரண்டு சதவீதம் ரேண்டம் அடிப்படையில் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் விமான நிலையங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பயணிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்களின் விவரங்களை சம்பத்தப்பட்ட மாநிலங்களுக்கு தெரிவிக்க வேண்டும் ,அதே வேளையில் அந்த மாதிரிகளை உரிய ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டும்.

இந்த உத்தரவு 24 ஆம் தேதி காலை 10 மணி முதல் அனைத்து விமான நிலையங்களிலும் கட்டயாமாக்கப்படுகிறது.


Full View


Tags:    

மேலும் செய்திகள்