புதிய தாலுகா பஞ்சாயத்து அலுவலக கட்டிடம் இன்று திறப்பு

புதிய தாலுகா பஞ்சாயத்து அலுவலக கட்டிடம் இன்று மந்திரி முனிரத்னா திறந்து வைக்கிறார்;

Update: 2022-10-13 18:45 GMT

கோலார் தங்கவயல்:

கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் புதிய தாலுகாவாக அறிவிக்கப்பட்ட பின் தாலுகா பஞ்சாயத்து நிர்வாக புதிய கட்டிடம் ராபர்ட்சன்பேட்டை அருகே உள்ள பாரண்டஹள்ளியில் ரூ.2 கோடி செலவில் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு நடக்க உள்ளது.

தாலுகா பஞ்சாயத்து அலுவலகம் திறப்பு விழாவுக்கு தொகுதி எம்.எல்.ஏ. ரூபாகலா சசிதர் தலைமை தாங்குகிறார். சிறப்பு விருந்தினராக மாவட்ட பொறுப்பு மந்திரி முனிரத்னா கலந்துகொண்டு தாலுகா அலுவலகத்தை திறந்து வைக்கிறார். இந்த விழாவில் கலெக்டர் வெங்கடராஜா, போலீஸ் சூப்பிரண்டு தரணி தேவி, மாவட்ட பஞ்சாயத்து செயல் அதிகாரி யுகேஷ்குமார், தங்கவயல் நகரசபை தலைவர் வள்ளல் முனிசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்