கர்நாடகத்தில் புதிதாக 941 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் புதிதாக 941 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் நேற்று 23 ஆயிரத்து 101 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் புதிதாக 941 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 526 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 788 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கொரோனாவுக்கு சாம்ராஜ்நகரில் ஒருவர் பலியானார். பீதர், கதக், யாதகிரி ஆகிய மாவட்டங்களில் நேற்று கொரோனா பாதிப்பு இல்லை.