கர்நாடகத்தில் புதிதாக 82 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் புதிதாக 82 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் நேற்று 7 ஆயிரத்து 762 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் பெங்களூரு நகரில் 38 பேர், தட்சிண கன்னடாவில் 7 பேர், ஹாசனில் 6 பேர் உள்பட 82 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 லட்சத்து 67 ஆயிரத்து 953 ஆக உயர்ந்து உள்ளது.
கலபுரகியில் மட்டும் நேற்று ஒருவர் இறந்தார். மற்ற 29 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. இதுவரை 40 ஆயிரத்து 254 பேர் உயிரிழந்து உள்ளனர். நேற்று 42 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை 40 லட்சத்து 25 ஆயிரத்து 331 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 2 ஆயிரத்து 326 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். பாதிப்பு 1.44 சதவீதமாகவும், உயிரிழப்பு 1.21 சதவீதமாகவும் உள்ளது.