மூதாட்டி கொலை வழக்கில் நேபாளத்தை சேர்ந்தவரின் ஜாமீன் மனு தள்ளுபடி

மூதாட்டி கொலை வழக்கில் நேபாளத்தை சேர்ந்தவர்களின் ஜாமீன் மனு தள்ளுப்படி செய்து பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-07-25 18:45 GMT

பெங்களூரு:-

நேபாளத்தை சேர்ந்தவர் சிவராஜ் ராட்டயா (வயது 63). இவர் பெங்களூரு பொம்மனஹள்ளி பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் பகுதியில் மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு (2022) அவரது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் மூதாட்டியை கொலை செய்துவிட்டு, நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து மூதாட்டியின் மகள் போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர். அவர்களில் நேபாள நாட்டை சேர்ந்த சிவராஜ் ராட்டய்யா (வயது 63) என்பவரும் ஒருவர் ஆவார். இதுதொடர்பான வழக்கு பெங்களூரு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அப்போது தனக்கு ஜாமீன் வழங்க கோரி, சிவராஜ் ராட்டய்யா மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, கொலை வழக்கில் கைதாகி உள்ள சிவராஜ் ராட்டய்யாவுக்கு ஜாமீன் வழங்க மறுத்ததுடன் அவரது ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்