போலி ஆவணங்களுடன் தென்னாப்பிரிக்கா செல்ல முயற்சி: நேபாளம் நாட்டை சேர்ந்தவர் கைது

போலி தடையில்லாத சான்றிதழுடன் தென்னாப்பிரிக்கா செல்ல முயன்ற நேபாளம் நாட்டை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-21 13:38 GMT

மும்பை,

மும்பையில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்கு செல்ல சம்பவத்தன்று நேபாளத்தை சேர்ந்த பயணி ஒருவர் விமான நிலையம் வந்தார். குடியுரிமை அதிகாரிகள் அவரது ஆவணங்களை ஆய்வு செய்தனர். அவரிடம் நேபாள நாட்டின் பாஸ்பார்போர்ட் இருந்தது. மேலும் தென்னாப்பிரிக்கா செல்வதற்கு டெல்லியில் உள்ள நேபாள நாட்டின் தூதரகத்தில் தடையில்லா சான்று பெற்று இருந்தார்.அந்த சான்றிதழின் நம்பகத்தன்மையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அதிகாரிகள் தடையில்லா சான்று குறித்து டெல்லியில் உள்ள நேபாள தூதரகத்தை தொடர்பு கொண்டு பேசினர். அப்போது பயணி வைத்திருப்பது போலி தடையில்லா சான்றிதழ் என்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் போலி ஆவணம் மூலம் வெளிநாடு செல்ல முயன்ற நேபாளத்தை சேர்ந்த 36 வயது நபரை கைது செய்தனர். சமீபத்தில் இதேபோல போலி தடையில்லா சான்று மூலம் ஒமன் செல்ல முயன்ற 4 நேபாள நாட்டு பெண்கள் மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்