இந்திய ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி - நேபாளத்தைச் சேர்ந்தவர் கைது

இந்திய ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்த நேபாளத்தைச் சேர்ந்த நபரை போலீசார் நேற்று கைது செய்தனர்.;

Update: 2022-12-12 01:45 GMT

காத்மாண்டு,

இந்திய ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2 கோடி மோசடி செய்த நரேந்திர பக்ரின் (வயது 43) என்ற நேபாளத்தைச் சேர்ந்த நபரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

கிழக்கு நேபாளத்தின் மொராங் மாவட்டத்தில், பிராட்நகர் தொழிற்பேட்டைக்கு அருகில், நரேந்திர பக்ரின் மறைந்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்தனர்.

பக்ரின் இந்திய ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 25-க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து தலா ரூ.6 லட்சம் வசூலித்ததாக தெரிகிறது. இது தொடர்பாக நேபாள போலீசார் பக்ரின் மீது வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்