மருத்துவ மேற்படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட் தேர்வு தேதி மாற்றம்
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்காக 'நீட் ' என்ற தேர்வு தேசிய தேர்வு முகமையால் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.;
புதுடெல்லி,
எம்டி, எம்எஸ், டிப்ளமோ மற்றும் எம்டிஎஸ் ஆகிய மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கான நீட் முதுநிலை தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. தேசிய தேர்வு முகமை இந்த தேர்வை நடத்தி வருகிறது. நடப்பு ஆண்டு இந்த தேர்வு வரும் மார்ச் மாதம் 3 ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு மார்ச் 3-ம் தேதிக்கு பதிலாக ஜூலை 7-ம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. முதுநிலை படிப்புகளுக்கான கட் ஆஃப் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.