நீட் தேர்வு விவகாரம், வினாத்தாள் கசிவு குறித்து விவாதம் தேவை-ராகுல் காந்தி
"நீட் தேர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும்'' என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.;
புதுடெல்லி,
நீட் சர்ச்சை தொடர்பாக ராகுல் காந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நீட் தேர்வு மற்றும் வினாத்தாள் கசிவு தொடர்பாக அரசுடன் ஆக்கப்பூர்வமாக விவாதம் நடத்த ‛ இந்தியா ' கூட்டணி விரும்பியது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக நாடாளுமன்றத்தில் அதனை செய்ய நாங்கள் அனுமதிக்கப்படவில்லை. நீட் தேர்வு விவகாரம் இந்தியா முழுவதும் உள்ள லட்சகணக்கான குடும்பங்களுக்கு கவலையை ஏற்படுத்தும் முக்கியமான விஷயம் இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் எனவும், மாணவர்களுக்கு உரிய மரியாதையை அளிக்க வேண்டும் என பிரதமர் மோடியை வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.