தொக்கொட்டு அருகே சங்கிலித்தொடர் விபத்து; 6 பேர் காயம்

தொக்கொட்டு அருகே ஏற்பட்ட சங்கிலித்தொடர் விபத்தில் 6 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2022-09-12 15:15 GMT

மங்களூரு;

தறிகெட்டு ஓடி...

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு - கேரளா தேசிய நெடுஞ்சாலையில் தொக்கொட்டு அருகே கல்லாப்பு பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அந்த கார் திடீரென முன்னால் சென்ற வாகனத்தை முந்திச்செல்ல முயன்றது. அந்த சந்தர்ப்பத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது.

இதனால் அந்த காருக்கு பின்னால் வந்த மற்றொரு காரை டிரைவர் நிறுத்த முயன்றார்.ஆனால் அவரது கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி சாலையோரம் நின்று கொண்டிருந்த ஒரு ஸ்கூட்டர், இன்னொரு கார் மீது பயங்கரமாக மோதியது.


சங்கிலித்தொடர் விபத்து

இந்த சங்கிலித்தொடர் விபத்தில் ஸ்கூட்டரை ஓட்டி வந்த கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்த தருண் என்பவர் படுகாயம் அடைந்தார். விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த கல்லூரி மாணவர் அம்ரித் என்பவரும் படுகாயம் அடைந்தார். அவரது காரில் பயணித்து வந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

காயம் அடைந்த 6 பேரும் மங்களூரு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இச்சம்பவம் குறித்து மங்களூரு தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.விபத்துக்கு மாணவர் அம்ரித் ஓட்டு வந்த கார் மட்டுமே காரணம் இல்லை என்றும், அதற்கு முன்னாள் சென்ற மற்றொரு காரினால்தான் விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.


போட்டி போட்டு...

அதாவது மாணவர் அம்ரித் ஓட்டி வந்த காரும், இன்னொரு காரும் போட்டி போட்டுக் கொண்டு அதிவேகமாக காரை ஓட்டி வந்ததே விபத்திற்கு காரணம் என்று போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்