3 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது

டிஎஸ்-இஓ என்ற புவி கண்காணிப்பு செயற்கைகோள் உள்பட 3 செயற்கைக்கோள்களுடன், பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட் விண்ணில் விண்ணில் பாய்ந்தது.

Update: 2022-06-30 12:40 GMT

ஸ்ரீஹரிகோட்டா,

டிஎஸ்-இஓ என்ற புவி கண்காணிப்பு செயற்கைகோள் உள்பட 3 செயற்கைக்கோள்களுடன், பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட் விண்ணில் விண்ணில் பாய்ந்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து மாலை 6 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.

இதற்கான 25 மணிநேர கவுண்ட்டவுன், நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கியது. டிஎஸ்-இஓ செயற்கைகோள் அதிக தெளிவுதிறன் மற்றும் ஒரே நேரத்தில் பல கோணங்களில் பூமியை படம் எடுக்கும் வசதி கொண்டது என்றும், கடல்சார் பாதுகாப்பு, பேரிடர் மீட்பு, பேரிடர் மீட்பிற்கு தேவைப்படும் மனித வளங்களை கண்டறிவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமியில் இருந்து புறப்பட்ட ராக்கெட் 19 நிமிடம் 20 வினாடிகளில் 570 கிலோ மீட்டர் உயரத்தில் சூரிய ஒத்திசைவான துருவ சுற்றுப்பாதையில், திட்டமிட்ட இலக்கில் பிரதான செயற்கைகோள், டி.எஸ்- இ.ஓ. செயற்கைகோள், அதேபோல், நியோ-சாட் மற்றும் சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் 2.8 கிலோ எடையுள்ள ஸ்கூப்-1 செயற்கைகோள்களும் வெற்றிகரமாக திட்டமிட்ட இலக்கில் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்