மணிப்பூர் வீடியோவை நீக்கக்கோரி டுவிட்டர் நிறுவனத்திற்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம்

மணிப்பூர் வீடியோவை நீக்கக்கோரி டுவிட்டர் நிறுவனத்திற்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.;

Update: 2023-07-20 11:18 GMT

புதுடெல்லி,

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து கோரி போராடி வருகின்றனர். அதற்கு குகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இரு சமூகத்தினருக்கும் இடையே கடந்த மே மாதம் 3-ம் தேதி மோதல் ஏற்பட்டது. பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் தொடர்வதால், 2 மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் இயல்பு நிலை திரும்பவில்லை.

இந்நிலையில், மணிப்பூரில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் இரண்டு பெண்கள் குறித்த அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது. இந்திய சட்டத்தின் கீழ் இதுபோன்ற வீடியோக்களை டுவிட்டர் நிறுவனம் வெளியிடக்கூடாது என்றும், சட்டம் ஒழுங்கில் சிக்கல்களை ஏற்படுத்தும் வீடியோக்களை காட்டுவதால், டுவிட்டருக்கு எதிராக இந்திய அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ பரவாமல் இருக்க தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்தநிலையில், மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக இழுத்து செல்லப்படும் வீடியோவை நீக்கக்கோரி டுவிட்டர் நிறுவனத்திற்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்