நாசா நிர்வாக அதிகாரி இந்தியா வருகை; இஸ்ரோ தலைவர்களை சந்திக்கிறார்

இந்தியாவை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் அவர் பயணம் மேற்கொள்ள உள்ளார்.;

Update: 2023-11-28 03:29 GMT

புதுடெல்லி,

அமெரிக்க விண்வெளி துறையான நாசா அமைப்பு இந்தியாவின் இஸ்ரோ அமைப்புடன் இணைந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், நாசா நிர்வாக அதிகாரியான பில் நெல்சன் இந்தியாவுக்கு இன்று வந்துள்ளார்.

இதுபற்றி அவர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், இந்தியாவில் வந்திறங்கியுள்ளேன். இஸ்ரோவுடனான நாசாவின் உறவை வளர்ப்பதற்கான ஒரு வாரகால கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு தயாராக உள்ளேன்.

விண்வெளி துறையில் இந்தியா தலைவராக செயல்பட்டு வருகிறது. ஆக்கப்பூர்வ முறையில் இந்த பயணம் இருக்கும் என எதிர்பார்க்கிறேன் என பதிவிட்டு உள்ளார்.

இதனை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் அவர் பயணம் மேற்கொள்ள உள்ளார். அவருடைய இந்த பயணத்தில், இரு நாட்டு விண்வெளி அதிகாரிகளையும் அவர் சந்தித்து பேசுகிறார்.

இந்த சந்திப்பில், விரிவான அளவிலான புதிய கண்டுபிடிப்பு மற்றும் புவி அறிவியல் உள்ளிட்ட ஆராய்ச்சி தொடர்பான துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்தும் வகையில் பேச இருக்கிறார் என நாசா வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

Tags:    

மேலும் செய்திகள்