ஜம்மு காஷ்மீரில் பயங்கர விபத்து.. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய மெகபூபா முப்தி

அனந்த்நாக் செல்லும் வழியில் மெகபூபா முப்தியின் கார் விபத்துக்குள்ளானதாக மக்கள் ஜனநாயக கட்சி தெரிவித்துள்ளது.

Update: 2024-01-11 10:18 GMT

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) தலைவருமான மெகபூபா முப்தி இன்று பிற்பகல் காரில் பயணம் செய்தபோது அவரது கார் விபத்துக்குள்ளானது. அனந்த்நாக் செல்லும் வழியில் மெகபூபா முப்தியின் கார் விபத்துக்குள்ளானதாக மக்கள் ஜனநாயக கட்சி தெரிவித்துள்ளது.

விபத்தில் காரின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்தது. மெகபூபா முப்தி மற்றும் அவருடன் பயணித்த அவரது பாதுகாப்பு அதிகாரிகள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்