நாராயணசாமி எம்.எல்.ஏ. மீது போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொலை மிரட்டல் விடுப்பதாக சமூக ஆர்வலர் குற்றச்சாட்டு

நாராயணசாமி எம்.எல்.ஏ கொலை மிரட்டல் விடுவதாக சமூக ஆர்வலர் ஒருவர் கோலார் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்துள்ளனர்.

Update: 2022-10-08 18:45 GMT

கோலார் தங்கவயல்:

கோலார் மாவட்டம் பங்காருபேட்டை தாலுகாவில் ஒப்பட்டு ஏரி உள்ளது. அந்த ஏரி பகுதியில் அம்பேத்கர் பவன் கட்டும் பணியை நாராயணசாமி எம்.எல்.ஏ. மேற்கொண்டார். அதை அறிந்த சமூக ஆர்வலர் ஸ்ரீதர் மூர்த்தி, ஏரியில் மண்ணை கொட்டி மூடி அம்பேத்கர் பவன் கட்ட தடை கோரி கர்நாடக ஐகோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு ஏரியில் அம்பேத்கர் பவன் கட்டுவதற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில் நேற்று ஸ்ரீதர் மூர்த்தி கோலார் தங்கவயல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தரணி தேவியை சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அதில், 'ஏரியில் அம்பேத்கர் பவன் கட்டுவதற்கு தடை விதிக்கும்படி நான் (ஸ்ரீதர் மூர்த்தி) ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தேன். எனது மனுவை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்டு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது. நான் இடைக்கால உத்தரவு பெற்றதற்காக பங்காருபேட்டை தொகுதி எம்.எல்.ஏ. நாராயணசாமி தனது ஆதரவாளர்களை ஏவி விட்டு எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்.

எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், எனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்திருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு தரணி தேவி, இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்