'நம்ம யாத்ரி' வாடகை ஆட்டோ சேவை அறிமுகம்

பெங்களூருவில் ‘நம்ம யாத்ரி’ வாடகை ஆட்டோ சேவை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2022-11-01 18:45 GMT

பெங்களூரு:


பெங்களூருவில் ஓலா, ஊபர் போன்ற தனியார் நிறுவனங்கள் செல்போன் செயலி மூலம் வாடகை ஆட்டோ, கார் சேவை வழங்கி வருகின்றன. இந்த நிலையில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்த நிறுவனங்கள் வாடகை ஆட்டோ சேவை வழங்க தடை விதிக்கப்பட்டது. பின்னர், அரசு அனுமதியுடன் சேவை வழங்கலாம் என கூறப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பெங்களூரு ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம், நம்ம யாத்ரி என்ற செல்போன் செயலியை உருவாக்கினர். அதன் மூலம் தனியார் நிறுவனங்களை சாராமல், சுயமாக வாடகை ஆட்டோ சேவை வழங்க முடியும் எனவும் கூறினர். கடந்த அக்டோபர் மாதம் உருவாக்கப்பட்ட இந்த செயலி நவம்பர் 1-ந் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் என கூறப்பட்டது. அதன்படி நேற்று முதல் நம்ம யாத்ரி செயலி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த செயலி பயன்பாட்டுக்கு வரும் முன்பே பலர் இதனை பதிவிறக்கம் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்