ஷாரிக்குடன் தொடர்பில் இருந்த மைசூரு வாலிபர் கைது

மங்களூருவில் குண்டுவெடிப்பை நிகழ்த்திய ஷாரிக்குடன் தொடர்பில் இருந்த மைசூரு வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-11-21 21:45 GMT

பெங்களூரு:

மங்களூரில் கடந்த 19-ந்தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. அந்த வெடிகுண்டை எடுத்து சென்ற ஷாரிக் என்பவர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தவர் ஆவார். இந்த நிலையில் ஷாரிக்குடன் தொடர்பில் இருந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஷாரிக்குடன், மைசூருவை சேர்ந்த முகமது என்பவரும் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதனால் அவரை கைது செய்ய மைசூரு போலீசார் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் அவர் பெங்களூரு கே.ஜி.ஹள்ளியில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்தார். இதுகுறித்து கே.ஜி.ஹள்ளி போலீசாருக்கு, மைசூரு போலீசார் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் முகமதுவை கே.ஜி.ஹள்ளி போலீசார் கைது செய்து மைசூரு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்