"பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் இந்தியா வந்த மர்ம பார்சல்" - சோதனையில் அதிர்ந்த அதிரடிப்படை
பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் இந்திய எல்லைக்கு கடத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்களை சிறப்பு அதிரடிப் படையினர் பறிமுதல் செய்தனர்.
புதுடெல்லி,
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் உள்ள ராம்தாஸ் செக்டாரில், கடந்த 8 நாட்களாக சிறப்பு அதிரடிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்கள் இந்திய எல்லைக்கு கடத்தப்படுவதை அதிரடிப்படையினர் கண்டுபிடித்தனர். மேலும் கடத்தல்காரர் பரம்ஜித் சிங் பம்மா என்பவரைக் கைது செய்தனர். அவரிடம் இருந்து 8 துப்பாக்கிகள், தோட்டாக்கள், சுமார் 2 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களையும் அதிரடிப்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் ஹரியானாவைச் சேர்ந்த குல்தீப் சிங் என்பவர் பாகிஸ்தான் வழியாக இந்திய எல்லைக்கு ஆயுதங்களை அனுப்பியது தெரியவந்துள்ளது. கைதான பம்மாவிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.