மிசோரமில் போதைப்பொருள் விற்ற மியான்மர் வாலிபர்கள் கைது
மிசோரமில் போதைப்பொருள் விற்ற மியான்மர் வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
அய்சாவல்,
மிேசாரம் மாநிலம் துவாம்புய் பகுதியில் போதைப்பொருள் விற்கப்படுவதாக வந்த தகவலின்பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு 2 வாலிபர்கள் ஹெராயின் விற்று கொண்டிருந்தனர். இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும், மியான்மர் நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.63 லட்சம் மதிப்புள்ள 126 கிராம் ஹெராயினை போலீசார் பறிமுதல் செய்தனர்.