எனது போன் ஒட்டுக்கேட்பு - கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் சந்தேகம்

தனது தொலைபேசிகள் ஒட்டுக்கப்படுவதாக சந்தேகம் உள்ளது என தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் புகார் தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-09 13:40 GMT

ஐதராபாத்,

தெலங்கானாவில் சந்திரசேர ராவ் தலைமையில் ராஷ்டிரிய தெலுங்கானா சமிதி கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. பா.ஜ.க எதிர்ப்பு நிலைப்பாட்டை முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் எடுத்துள்ள நிலையில், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் முதல்-மந்திரி சந்திரசேர ராவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படத் தொடங்கியது. இது நாளுக்கு நாள் மோதல் போக்கு தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில், தனது தொலைபேசிகள் ஒட்டுக்கப்படுவதாக சந்தேகம் உள்ளது என தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் புகார் தெரிவித்துள்ளார். முன்னாள் உதவியாளர் துஷார் தீபாவளி வாழ்த்து சொன்னதில் இருந்து தனது போன் ஒட்டுக்கேட்கப்படுவதாக சந்தேகம் உள்ளது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும் தெலுங்கானா மாநிலத்தில் கவர்னருக்கு உரிய மரியாதை கொடுப்பதில் ஜனநாயகமற்ற சூழல் நிலவுகிறது, தேவையில்லாமல் ஆளுநர் மாளிகையை குற்றம்சாட்டி பேசுகின்றனர் என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்