வரமகாலட்சுமி பண்டிகையை கொண்டாடிய முஸ்லிம் குடும்பம்

கொப்பல் அருகே வரமகாலட்சுமி பண்டிகையை முஸ்லிம் குடும்பத்தினர் கொண்டாடினர்.;

Update: 2022-08-06 17:34 GMT

கொப்பல்:

கர்நாடகத்தில் நேற்று வரமகாலட்சுமி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாநிலத்தில் உள்ள மகாலட்சுமி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இந்துக்கள் பண்டிகை என்று கூறப்படும் வரமகாலட்சுமி பண்டிகையை ஒரு முஸ்லிம் குடும்பமும் கொண்டாடி உள்ளது. இதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

கொப்பல் தாலுகா அவலந்தி என்ற கிராமத்தை சேர்ந்தவர் நஜ்ருதீன். இவர் நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் சேர்ந்து தனது வீட்டில் வரமகாலட்சுமி பண்டிகை கொண்டாடினார். அதாவது மகாலட்சுமியின் சிலையை அலங்கரித்து அவர் பூஜைகள் செய்து வழிபட்டார். மேலும் உணவுகள் தயாரித்து அக்கம்பக்கத்தினருக்கு வழங்கினார். இதுகுறித்து நஜ்ருதீன் கூறும்போது, கடந்த 3 ஆண்டுகளாக எனது குடும்பத்தினருடன் சேர்ந்து வரமகாலட்சுமி பண்டிகையை கொண்டாடி வருகிறேன். இது மகிழ்ச்சி அளிக்கிறது. கிராமத்தில் நடக்கும் இந்து பண்டிகைகளிலும் கலந்து கொள்கிறேன் என்றார். நஜ்ருதீன், வரமகாலட்சுமி பண்டிகை கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்