வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி மீது கொலைவெறி தாக்குதல் - நகைகளுக்காக கொல்ல முயன்ற கேபிள் ஆபரேட்டர்

படுகாயமடைந்த மூதாட்டி நாரயணம்மா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.;

Update: 2024-01-31 22:02 GMT

விசாகப்பட்டினம்,

வீட்டில் தனியாக இருந்த 67 வயது மூதாட்டியை, கேபிள் ஆபரேட்டர் கழுத்தை நெரித்து கொல்ல முயன்று, 10 சவரன் நகைகளை பறித்து சென்ற சிசிடிவி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகேயுள்ள அனகாபள்ளியில் நடந்த இந்த சம்பவத்தில், படுகாயமடைந்த மூதாட்டி நாரயணம்மா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 10 சவரன் நகைகளையும் பறித்துச் சென்ற கேபிள் ஆபரேட்டர் கோவிந்தனை போலீசார் தேடி வரும் நிலையில், சம்பவம் குறித்தான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Full View

Tags:    

மேலும் செய்திகள்