கோடரியால் தாக்கி கள்ளக்காதல் ஜோடி கொலை
கோடரியால் தாக்கி கள்ளக்காதல் ஜோடியை கொலை செய்த கணவனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.;
பெலகாவி:-
பெலகாவி மாவட்டம் கோகாக் தாலுகா புறநகர் பகுதியை சேர்ந்தவர் மல்லிகார்ஜூன் (வயது 35). கூலி தொழிலாளி. இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த ரேணுகா என்ற 40 வயது பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர். இதுகுறித்து ரேணுகாவின் கணவர் எல்லப்பாவுக்கு தெரியவந்தது. உடனே அவர் கள்ளக்காதலை கைவிடுமாறு கூறி உள்ளார். ஆனால் அதற்கு ரேணுகா மறுத்துள்ளார். இதையடுத்து ஆத்திரமடைந்த எல்லப்பா, அவர்கள் 2 பேரையும் கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி நேற்று ரேணுகா, மல்லிகார்ஜுனாவுடன் தனிமையில் சந்தித்து பேசி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த எல்லப்பா, அங்கு கிடந்த கோடரியை எடுத்து, 2 பேரையும் தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர்கள் 2 பேரும் உயிரிழந்தனர். இதையடுத்து அவர் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து கிராமத்தினர் உடனடியாக அங்காலகி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் எல்லப்பாவை வலைவீசி தேடி வருகின்றனர்.