கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று உடல் புதைப்பு; பெண் உள்பட 4 பேர் கைது

பெலகாவியில் தொழிலாளி மாயமான வழக்கில் திடீர் திருப்பமாக, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று அவரது உடலை மலைப்பகுதியில் புதைத்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக அவரது மனைவி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-23 21:13 GMT

பெலகாவி:

பெலகாவியில் தொழிலாளி மாயமான வழக்கில் திடீர் திருப்பமாக, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று அவரது உடலை மலைப்பகுதியில் புதைத்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக அவரது மனைவி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெயிண்டர்

பெலகாவி டவுன் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ரமேஷ். பெயிண்டர். இவரது மனைவி சந்தியா. இந்த நிலையில் ரமேஷ் கடந்த மார்ச் மாதம் வீட்டில் இருந்து மாயமானார். இதையடுத்து அவரது மனைவி சந்தியா, டவுன் போலீசில் தனது கணவர் மாயமானதாக புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சந்தியாவின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் சந்தியாவை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

அதாவது சந்தியாவுக்கும், ரமேசின் நண்பர் பாலு என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதுகுறித்து ரமேசிற்கு தெரியவந்தது. உடனே அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார். எனினும் கணவர் பேச்சை, சந்தியா கேட்கவில்லை. இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து அவர் தனது கள்ளக்காதலன் பாலுவுடன் சேர்ந்து ரமேசிற்கு மயக்க மாத்திரைகளை கொடுத்துள்ளார். பின்னர் அவர் மயங்கியவுடன், ரமேசின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

4 பேர் கைது

மேலும் போலீசிடம் இருந்து தப்பிப்பதற்கு, தனது கணவர் உடலை கோவா மாநில எல்லையில் உள்ள மலைப்பகுதியில் புதைத்துள்ளார். மேலும் தன் மீது சந்தேகம் ஏற்படாமல் இருக்க போலீசில் புகார் அளித்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் சந்தியா மற்றும் அவரது கள்ளக்காதலன் பாலு உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ரமேசின் உடலை தேடும் பணியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்