இரட்டை கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கோர்ட்டில் சரண்

பெங்களூரு அருகே நடந்த இரட்டை கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை 10 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-02-24 20:33 GMT

பெங்களூரு:

பெங்களூரு அருகே நடந்த இரட்டை கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை 10 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 வாலிபர்கள் கொலை

பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புரா தாலுகா தொட்டபெலவங்களா போலீஸ் எல்லைக்கு உடபட்ட பகுதியை சேர்ந்தவர் பரத். இவரது நண்பர் பிரதிக். கடந்த வாரம் தொட்டபெலவங்களாவில் நடந்த கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட தகராறில் பரத் மற்றும் பிரதிக் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டு இருந்தார்கள். இந்த சம்பவம் தொட்டபள்ளாப்புராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த இரட்டை கொலை தொடர்பாக ஏற்கனவே வினய் மற்றும் ஸ்ரீமூர்த்தி ஆகிய 2 பேரை தொட்டபெலவங்களா போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்து கைது செய்திருந்தார்கள். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர்.

கோர்ட்டில் வாலிபர் சரண்

இந்த நிலையில் பரத், பிரதிக் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த அனில் என்பவர் தொட்டபள்ளாப்புரா தாலுகா கோர்ட்டில் தனது வக்கீலுடன் சென்று சரண் அடைந்தார். அவர் குலிகுண்டே கிராமத்தை சேர்ந்த அனில் வினயின் கூட்டாளி ஆவார். அவருடன் சேர்ந்து இந்த இரட்டை கொலையில் ஈடுபட்டு இருந்தார். கோர்ட்டில் சரண் அடைந்த அனிலை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜ் தெரிவித்துள்ளார்.

போலீசாரின் துப்பாக்கி சூட்டுக்கு பயந்து அனில் கோர்ட்டில் சரண் அடைந்திருப்பது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் இரட்டை கொலையில் சம்பந்தப்பட்ட கோரி மற்றும் தீபு ஆகிய 2 பேரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைது செய்ய தொட்டபெலவங்களா போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்