குடும்ப தகராறில் கத்தியால் குத்தி மனைவி படுகொலை; விஷம் குடித்து லாரி டிரைவர் தற்கொலை

உடுப்பி அருகே குடும்ப தகராறில் மனைவியை கொன்றுவிட்டு லாரி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-08-22 16:16 GMT

மங்களூரு:

சிவமொக்கா மாவட்டம் சொரப் பகுதியைச் சேர்ந்தவர் பூர்ணிமா ஆச்சார்யா(வயது 38). இவரது கணவர் ரவி ஆச்சார்யா(42). இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். ரவி ஆச்சார்யா உடுப்பியில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இதனால் தம்பதி உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகா கட்பெல்லூரை அடுத்த தேவல்முண்டா பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.


மதுபோதைக்கு அடிமையான ரவி ஆச்சார்யா, அடிக்கடி தனது மனைவி பூர்ணிமாவிடம் தகராறு செய்து வந்தார். இதனால் அவர் கணவரிடம் கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் மனைவியை வீட்டுக்கு அழைத்து வந்த ரவி, கத்தியால் அவரை குத்தி கொலை செய்துவிட்டு, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து குந்தாபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்