மும்பை பயங்கரவாத தாக்குதல்; 15-வது நினைவு தினத்தில் ஏக்நாத் ஷிண்டே மரியாதை

லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் 10 பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்தினார்கள்.;

Update: 2023-11-26 06:04 GMT

மும்பை,

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை பாகிஸ்தான் பயங்கரவாத கும்பல் திடீர் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில், வெளிநாட்டினர் உள்பட 175 பேர் கொல்லப்பட்டனர். 320-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் 10 பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்தினார்கள். அவர்களில் அஜ்மல் கசாப் பிடிபட்டான். மற்றவர்கள் சுட்டு கொல்லப்பட்டனர். கசாப் பின்னர் தூக்கிலிடப்பட்டான்.

மும்பை பயங்கரவாத தாக்குதலின் 15-வது நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, மராட்டிய கவர்னர் ரமேஷ் பயாஸ், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்-மந்திரி பட்னாவிஸ் ஆகியோர் மும்பையில் உள்ள காவல் துறை ஆணையாளர் அலுவலக வளாக பகுதியில் அமைந்த, வீரமரணம் அடைந்தவர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்