மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் 430 புள்ளிகள் உயர்வு

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 430 புள்ளிகள் உயர்ந்து உள்ளது.

Update: 2022-05-27 05:09 GMT

மும்பை,

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 430 புள்ளிகள் உயர்ந்து 54,685 புள்ளிகளாக உள்ளது.

இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 16,301 புள்ளிகளாக உள்ளது. மாத இறுதியில் பங்கு சந்தைகள் ஏற்றமுடன் காணப்படுவது முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இந்த வார தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து 3 நாட்கள் சென்செக்ஸ் குறியீடு சரிவுடனேயே காணப்பட்டது. எனினும், நேற்று சரிவில் இருந்து மீட்சியடைந்து 503.27 புள்ளிகள் வரை ஏற்றம் கண்டு 54,252.53 ஆக வர்த்தகம் நிறைவடைந்தது.

தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடும் 144.35 புள்ளிகள் ஏற்றம் கண்டு 16,170.15 புள்ளிகளாக இருந்தது. இந்நிலையில், இன்று மீண்டும் பங்கு சந்தை வர்த்தகம் லாப நோக்கில் காணப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்