மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 180 புள்ளிகள் உயர்வு
மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 180 புள்ளிகள் உயர்ந்து 53,207.31 புள்ளிகளாக இருந்தது.
மும்பை,
மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 180 புள்ளிகளுக்கும் கூடுதலாக உயர்வடைந்து 53,207.31 புள்ளிகளாக இருந்தது. நடப்பு வாரத்தின் முதல் நாளான கடந்த திங்கட் கிழமையில் இது 53,300 புள்ளிகளை கடந்து உயர்ந்து காணப்பட்டது. எனினும், அடுத்த இரு நாட்களில் சரிவை சந்தித்தது.
இந்நிலையில், இந்த வாரம் மற்றும் மாதம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், பங்கு சந்தைகள் இன்று உயர்ந்து உள்ளன.
தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 15,800 புள்ளிகளாக உயர்ந்து உள்ளது. எனினும், இது கடந்த திங்கட் கிழமையுடன் ஒப்பிடும்போது (15,900) குறைவாகும்.
சென்செக்ஸ் குறியீட்டில் டாடா ஸ்டீல் அதிக லாபம் (1.25 சதவீதம்) ஈட்டியுள்ளது. இதனை தொடர்ந்து பவர்கிரிட் (1.11 சதவீதம்), ரிலையன்ஸ் (0.97 சதவீதம்), இன்டஸ்இன்ட் வங்கி (0.88 சதவீதம்) ஆகியவை உள்ளன.