மும்பை: ஆரஞ்சு பழங்கள் என்ற பெயரில் ரூ.1,476 கோடி போதை பொருள் கடத்தல்

மராட்டியத்தில் லாரி ஒன்றில் இறக்குமதி ஆரஞ்சுகள் என கூறி ரூ.1,476 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் கடத்தப்பட்டு உள்ளன.

Update: 2022-10-01 13:39 GMT



மும்பை,


மராட்டியத்தின் மும்பை நகரில் வஷி பகுதியில் லாரி ஒன்று சந்தேகத்திற்குரிய வகையில் சென்றுள்ளது. அதனை மும்பை வருவாய் நுண்ணறிவு இயக்குனரக அதிகாரிகள் வழிமறித்து சோதனையிட்டு உள்ளனர்.

இதில், அந்த லாரியானது இறக்குமதி செய்யப்பட்ட ஆரஞ்சுகளை கொண்ட பெட்டிகளை உள்ளடக்கி இருந்தது. எனினும், அதில் தொடர்ந்து அதிகாரிகள் சோதனையிட்டதில் ஆரஞ்சு பெட்டிகளுக்குள் 198 கிலோ எடை கொண்ட மெத்தாம்பெட்டமைன் மற்றும் 9 கிலோ எடையுள்ள அதிக தூய்மையான கோகைன் என்ற போதை பொருளும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.

இவற்றின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.1,476 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, இந்த சரக்குகளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த நபரை அதிகாரிகள் கைது செய்து அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என மும்பை வருவாய் நுண்ணறிவு இயக்குனரக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்