சிவசேனாவை உடைத்தது பாஜகதான்; தேசியவாத காங்கிரஸ் குற்றச்சாட்டு

இந்துக்களின் ஓட்டு சிதறும் என்ற அச்சத்தில் பா.ஜனதா சிவசோனவை உடைத்தது என ேதசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் குற்றம் சாட்டி உள்ளார்.

Update: 2022-10-13 12:56 GMT

கோப்புப் படம் (பிடிஐ)

மும்பை,

தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவா் ஜெயந்த் பாட்டீல் கோலாப்பூரில் கூறியதாவது:- ஜனநாயக ரீதியின் ஆட்சியை பிடிக்க முடியாத பா.ஜனதா, சிவசேனாவில் பிளவை ஏற்படுத்தி மகாவிகாஸ் ஆட்சியை கவிழ்த்தது. இதுவும் ஒருவகையான பாவம் தான். சிவசேனா அதிருப்தி அணி பா.ஜனதாவால் உருவாக்கப்பட்டது. இந்துக்கள் ஓட்டுக்கள் சிதறினால், இனிமேல் மராட்டியத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது என்ற அச்சம் பா.ஜனதாவுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே அந்த கட்சி சிவசேனாவை உடைத்து உள்ளது. சிவசேனா பலமாக இருந்தால், மகாவிகாஸ் அகாடி அரசை உடைக்க முடியாது என்ற முடிவுக்கு பா.ஜனதா வந்து இருக்கிறது.

இந்தநிலையில் தற்போது சிவசேனா சின்னத்தையும், கட்சியின் பெயரையும் இழந்து உள்ளது. தேர்தல் ஆணையம் பாலாசாகேப் தாக்கரே பெயரை ஏற்றுக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் மூலம் எல்லாமே திட்டமிட்டு நடத்தப்படுவது தெரிகிறது. ஆனால் இது எல்லாம் சிவசேனாவுக்கு சாதகமாக அமையும். ஷிண்டே - பட்னாவிஸ் அரசு ஒரு ஆண்டுக்கு மேல் நீடிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்