பொதுக்கழிப்பறை கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட தகராறில், ஒருவர் கொலை

மும்பையில் பொதுக்கழிப்பறை கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட தகராறில், ஒருவர் கொலைசெய்யப்பட்டார்.;

Update: 2022-12-16 01:29 GMT

மும்பை,

கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட தகராறில், பொதுக் கழிப்பறையின் பராமரிப்பாளரால் ஒருவர் கொல்லப்பட்டதாக போலீஸார் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

மத்திய மும்பையின் தாதர் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள பொது கழிப்பறை அருகே புதன்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட ராகுல் பவார், பொது கழிவறையை பயன்படுத்திவிட்டு பணம் கொடுக்காமல் சென்று கொண்டிருந்த போது, காப்பாளர் விஸ்வஜீத் அவரை தடுத்து நிறுத்தியதால், இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பவார் அவரை கத்தியால் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது, மேலும் மற்றொருவர் அவரை மரக் கம்பியால் மீண்டும் தலையில் தாக்கியதாகக் கூறப்படுகிறது, அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

விசாரணைக்குப் பிறகு விஸ்வஜித் சிங்கை மாட்டுங்கா போலீஸார் கைது செய்தனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

 

Tags:    

மேலும் செய்திகள்