மும்பை ரெயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து- பயணிகள் வெளியேற்றம்

முதலாவது பிளாட்பாரத்தில் உள்ள கேண்டீனில் தீப்பிடித்ததாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2023-12-13 12:00 GMT

மும்பை:

மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ளது லோகமான்ய திலக் ரெயில் நிலையம். எப்போதும் பிசியாக இருக்கும் இந்த ரெயில் நிலையத்தில் இன்று பிற்பகல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. முதலாவது பிளாட்பாரத்தின் ஒரு பகுதியில் பற்றிய தீ மளமளவென பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. அங்கு நின்றிருந்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் 2 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். முதலில் பயணிகள் அனைவரையும் பத்திரமாக வெளியேற்றினர். பின்னர் அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

முதலாவது பிளாட்பாரத்தில் இருந்த கேண்டீனில் தீப்பிடித்ததாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்