செக் மோசடி: பிரபல நடிகையின் சகோதரர் கைது
செக் மோசடி வழக்கில் பிரபல நடிகையின் சகோதனை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
இந்தி திரைத்துறையின் பிரபல நடிகை ராக்கி சாவந்த். இவர் பல்வேறு சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர். இதனிடையே ராக்கி சாவந்த் சகோதரர் ராகேஷ் சாவந்த். இவர் கடந்த 2020-ம் ஆண்டு தொழிலதிபர் ஒருவருக்கு பணம் செக் ஆக கொடுத்துள்ளார்.
ஆனால், அந்த செக்கை தொழிலதிபர் வங்கியில் டெபாசிட் செய்தபோது அதில் பணம் இல்லை என செக் நிராகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உடனடியாக தொழிலதிபர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையின் வழக்குப்பதிவு செய்த போலீசார் ராக்கி சாவந்தின் சகோதரன் ராகேஷை கைது செய்தனர்.
பின்னர், பணத்தை திருப்பி தருவதாக உத்தரவாதம் அளித்ததின் அடிப்படையில் ஜாமினில் ராகேஷ் விடுதலை செய்யப்பட்டார். ஆனால், பல மாதங்கள் கடந்தும் உத்தரவாதம் அளித்தபடி பணத்தை ராகேஷ் திரும்பி தரவில்லை.
இதையடுத்து, தொழிலதிபர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு ராகேஷ் சாவந்தை கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டது.
கோர்ட்டு உத்தரவையடுத்து செக் மோசடி வழக்கில் ராக்கி சாவந்தின் சகோதரர் ராகேஷ் சாவந்தை இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராகேஷ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 22ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.