மும்பை: கொரோனா பரவலால் விடுவித்த சிறை கைதிகளில் 18 பேர் மீண்டும் கைது

மராட்டியத்தின் மும்பை நகரில் கொரோனா பரவலால் பரோலில் விடுவித்த சிறை கைதிகளில் 18 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2023-03-02 17:13 GMT



மும்பை,


நாட்டில் கொரோனா பெருந்தொற்று பரவியபோது, அதிகம் பாதித்த மாநிலங்களின் வரிசையில் மராட்டியம் முதல் இடம் பிடித்தது. மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களில் அதிக பாதிப்புகள் காணப்பட்டன.

இதனை தொடர்ந்து மராட்டியத்தில் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு இருந்த, குற்றவாளிகள் என கோர்ட்டு தண்டனை விதித்த கைதிகள், விசாரணை கைதிகள் உள்ளிட்ட கைதிகளில் பலர், பரோலில் விடுவிக்கப்பட்டனர். அவர்களின் பரோல் முடிந்ததும் அவர்கள் மீண்டும் சிறைக்கு திரும்ப வேண்டும். அதன்படி, பலர் சிறைக்கு திரும்பினர்.

ஆனால், அவர்களில் சிலர் அப்படி செய்யவில்லை. பரோல் காலம் நிறைவடைந்தும் சிறைக்கு திரும்பி வராமல் இருந்து உள்ளனர். இதனை அடுத்து, மும்பை போலீசார் சமீபத்தில் சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டு அவர்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டனர்.

இதன்பின், அவர்களை கைது செய்து வந்து உள்ளனர். இதன்படி, 18 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த சிறப்பு நடவடிக்கை தொடரும் என போலீசார் தெரிவித்தனர். சிறைகளில் நெருக்கடியை தவிர்க்கவே, கொரோனா பரவலை தடுக்கவே கைதிகள் பரோலில் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்