இந்திய அட்டர்னி ஜெனரல் பதவியை ஏற்க முகுல் ரோஹத்கி மறுப்பு

இந்திய அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலின் பதவிக்காலம் வருகிற 30-ந் தேதியுடன் முடிவடைகிறது.

Update: 2022-09-25 17:08 GMT

புதுடெல்லி,

இந்திய அட்டர்னி ஜெனரலாக மூத்த வக்கீல் கே.கே.வேணுகோபால், கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இருந்து வருகிறாா். இவரது பதவிக்காலம் கடந்த ஜூன் 30-ந் தேதி முடிவடைந்தது.

இதனையடுத்து, இந்திய அட்டர்னி ஜெனரலாக மேலும் 3 மாதங்கள் தொடர மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. இதனை ஏற்ற அவா் இந்திய அட்டர்னி ஜெனரலாக இருந்து வருகிறார். இந்த நிலையில், இவரது பதவிக்காலம் வருகிற 30-ந் தேதியுடன் முடிவடைகிறது.

இந்தநிலையில், அடுத்த இந்திய அட்டர்னி ஜெனரலாக மூத்த வக்கீல் முகுல் ரோஹத்கி பதவியேற்க மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால் இந்த கோரிக்கையை அவர் நிராகரித்துள்ளார். மத்திய அரசின் தலைமை வக்கீலாக பதவி ஏற்பதில் மாறுபட்ட கருத்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மூத்த வக்கீல் முகுல் ரோஹத்கி, 14-வது அட்டர்னி ஜெனரலாக கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2017-ம் ஆண்டு ஜூன் வரை பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்