எகிப்தில் உள்ள இந்தியர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்....!!

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக எகிப்து நாட்டிற்கு சென்றுள்ளார்.;

Update: 2023-06-25 09:40 GMT

புதுதில்லி ,

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக எகிப்து நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் கெய்ரோவில் உள்ள இந்திய சமூகத்தினருடன் கலந்துரையாடினார். அவர்களுடனான கலந்துரையாடலின் போது, இந்தியா-எகிப்து இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதில் இந்திய சமூகத்தினர் ஆற்றியுள்ள சிறந்த பங்களிப்பைப் பிரதமர் பாராட்டினார். மாணவர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் வணிகர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்