விவகாரத்து பெற்றதை கொண்டாட ஆண்களுக்கு எதிர்ப்பு - நிகழ்ச்சி ரத்து

நீண்டகால சட்ட போராட்டத்திற்கு பின் 18 ஆண்களுக்கு மனைவிகளிடமிருந்து விவாகரத்து கிடைத்துள்ளது.

Update: 2022-09-12 07:25 GMT

Image Courtesy: PTI 

போபால்,

மத்தியபிரதேசத்தில் 'பாய் நல சங்கம்' என்ற தன்னார்வு அமைப்பு 2014 முதல் செயல்பட்டு வருகிறது. ஷகி அகமது என்பவர் தலைமையில் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு, மனைவியிடமிருந்து விவாகரத்து பெற கோர்ட்டில் போராடி வரும் ஆண்களுக்கு சட்டரீதியில் உதவிகளை அளித்து வருகிறது. இந்த அமைப்பில் டாக்டர்கள், ஆசிரியர்கள், என்ஜினியர்கள் என பலதரப்பினரும் உறுப்பினர்களாக உள்ளனர்.

இதனிடையே, நீண்ட சட்டப்போராட்டம், அதிக ஜீவாம்சம் கொடுத்து 18 ஆண்கள் தங்கள் மனைவிகளிடமிருந்து சமீபத்தில் கோர்ட்டில் விவாகரத்து பெற்றனர். இந்த விவாகரத்தை கொண்டாட திருமண கலைப்பு நிகழ்ச்சி என்ற நிகழ்ச்சிக்கு 'பாய் நல சங்கம்' ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சி போபால் நகரில் வரும் 18-ம் தேதி தனியார் ஓட்டலில் நடைபெறவதாக இருந்தது.

இந்நிலையில், விவாகரத்து பெற்றதை ஆண்கள் கொண்டாட தன்னார்வு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சில பெண்கள் அமைப்புகள் இந்த கொண்டாட்டத்திற்கு எதிராக போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து ஆண்கள் விவாகரத்து பெற்றதை கொண்டாட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியை தன்னார்வு அமைப்பு ரத்து செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்