எம்.பி. நவ்னீத் ராணாவுக்கு கொலை மிரட்டல்; மர்ம நபர் கைது

நாடாளுமன்ற மக்களவை பெண் எம்.பி.யான நவ்னீத் ராணாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை மராட்டிய போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-08-22 12:05 GMT

அமராவதி,

நாடாளுமன்ற மக்களவை பெண் எம்.பி.யாக இருப்பவர் நவ்னீத் ராணா. மராட்டியத்தின் அமராவதி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இவருக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசி வழியே கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து, மராட்டிய போலீசார் ஐ.பி.சி.யின் 504, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். ராணாவின் தனி செயலாளரான வினோத் குஹே அளித்த புகாரின் பேரில் விசாரணை நடந்தது.

இதில் விட்டல் ரா என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து, கொலை மிரட்டல் விடுத்ததற்கான காரணம் பற்றி அந்நபரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்