சக்கரங்கள் வைத்த பெட்டியை தலையில் சுமப்பதா? - ராகுல் காந்தியை கிண்டல் செய்த சிவராஜ் சிங் சவுகான்
பெட்டியை தலையில் சுமந்தது தொடர்பாக சிவராஜ் சிங் சவுகான், ராகுல் காந்தியை கிண்டல் செய்துள்ளார்.;
போபால்,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் டெல்லி ரெயில் நிலையத்தில் சுமைதூக்கும் தொழிலாளர்களை (போர்ட்டர்கள்) சந்தித்து கலந்துரையாடினார்.
அப்போது அவர் அந்த தொழிலாளர்களின் சீருடை அணிந்து, சக்கரங்கள் வைத்த பெட்டி (சூட்கேஸ்) ஒன்றை தலையில் சுமந்து சென்றார்.
இது தொடர்பாக மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான், ராகுல் காந்தியை கிண்டல் செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், 'எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. சக்கரங்களை கொண்ட சூட்கேசை இழுத்து செல்வதற்குப் பதிலாக தலையில் சுமந்து செல்லும் ஒருவரை தலைவராக கொண்ட கட்சியின் (காங்கிரஸ்) எதிர்காலம் என்னவாகும்?' என கேள்வி எழுப்பினார்.