ஓட்டலின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் பலி

மேற்கூரை இடிந்து விழுந்து 5 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-08-23 09:35 GMT

போபால்,

மத்திய பிரதேசம் இந்தூர் மாவட்டத்திலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள சோரல் கிராமத்தில் ஒரு தனியார் ஓட்டலில் கட்டுமான பணி நடைபெற்று வந்தது. வழக்கம்போல நேற்று இரவு பணி முடிந்து தொழிலாளர்கள் அங்கு தூங்கி கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஓட்டலின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் தூங்கி கொண்டிருந்த 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து காலை 6.30 மணியளவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக இந்தூர் (கிராமப்புற) காவல் கண்காணிப்பாளர் ஹித்திகா வாசல் கூறுகையில், "இரவு நடந்த இந்த விபத்து குறித்து காலையில் வேலைக்கு வந்த தொழிலாளர்கள் மூலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்தில் 5 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்