தியேட்டரில் படத்தை, செல்போனில் பதிவு செய்த வாலிபர் கைது

தியேட்டரில் படத்தை செல்போனில் பதிவு செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-08-18 21:09 GMT

பெங்களூரு: பெங்களூரு பானசவாடி பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் தியேட்டரில் புதிய படம் ஒன்று திரையிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று அந்த படத்தை பார்க்க வந்த ஒருவர், தனது செல்போனில் படத்தை பதிவு செய்து கொண்டிருந்தார்.

இதனை பார்த்த தியேட்டர் மேலாளர், பானசவாடி போலீசில புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து அந்த நபரை பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர் அதேப்பகுதியை ஜெப ஸ்டீபன்ராஜ் என்பது தெரியவந்தது. இதுகுறித்து பானசவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்