சிறுத்தைகள் நடமாட்டம்: திருப்பதி மலைப்பாதைகளில் சிறுவா்,சிறுமியர் மலையேற அனுமதியில்லை

மலையேறி செல்வதற்கு தேவஸ்தானம் நிர்வாகம் கட்டுப்பாடுளை விதித்துள்ளது

Update: 2023-08-13 15:49 GMT

திருப்பதி,


நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த  தினேஷ்குமார். அவர், தனது மனைவி சசிகலா மற்றும் மகள் லக்ஷிதாவுடன் நேற்று முன்தினம் இரவு திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க அலிபிரி நடைபாதையில் வந்தார். அப்போது தனியாக நடந்து சென்ற சிறுமியை சிறுத்தை இழுத்துச் சென்று கடித்துக் கொன்றது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

 இந்த நிலையில்,   மலையேறி செல்வதற்கு தேவஸ்தானம் நிர்வாகம் கட்டுப்பாடுளை விதித்துள்ளது.   

 நாளை முதல் 15 வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர் பாதயாத்திரையாக நடந்து மலையேறி செல்ல அனுமதி இல்லை .

மலைப்பாதைகளில் இருசக்கர வாகனங்களில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பயணிக்க அனுமதி அளிக்கப்படும் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

வனவிலங்குகளின் நடமாட்டம் குறைந்து நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வரும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்