மோட்டார் சைக்கிளில் சாகசம்; 5 பேர் கைது

சிக்கமகளூருவில் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-06-27 15:35 GMT

சிக்கமகளூரு;

சிக்கமகளூரு டவுன் வீட்டுவசதி குடியிருப்பு சாலையில் சில வாலிபர்கள் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அதேப்பகுதியில் 5 பேர் மோட்டார் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து விலையுயர்ந்த 5 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். கைதான 5 பேர் மீதும் சிக்கமகளூரு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்