டெல்லியில் 3 குழந்தைகளின் தாய் நடுரோட்டில் சுட்டுக்கொலை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கண்காணிப்பு கேமரா பதிவுகளை சேகரித்து மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;
புதுடெல்லி,
டெல்லி உத்யோக்நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஜோதி (வயது 32) என்ற பெண் வேலை பார்த்து வந்தார். இவர் வேலை முடிந்து ஸ்கூட்டரில் வீடு திரும்பியபோது பசிம்விகார் என்ற பகுதியில் நடுரோட்டில் 2 மர்மநபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கொலையாளிகள் யார்? எதற்காகக் கொலை நடந்தது? எனத் தெரியவில்லை. அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை சேகரித்து மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட பெண்ணுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.