'அம்மா என்பது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு உணர்வு' - ராகுல் காந்தி
அம்மா என்பது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு உணர்வு என அன்னையர் தின வாழ்த்துச் செய்தியில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.;
புதுடெல்லி,
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு இன்று (மே 12) அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "அம்மா என்பது பாசம், தியாகம், பொறுமை மற்றும் வலிமை ஆகிய வார்த்தைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்ட ஒரு உணர்வு. அன்னையர் தினமான இன்று, தாய்மையின் சக்தி அனைத்திற்கும் வணக்கம் செலுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.