மகன் மாரடைப்பால் இறந்ததை கேட்டு தாயும் மரணம் - தெலுங்கானாவில் சோகம்...!

மகன் இறந்த செய்தியை கேட்ட தாயார் லட்சுமி திடீரென மயக்கம் அடைந்து விழுந்தார்.;

Update: 2024-01-06 09:58 GMT

மேடக்,

தெலுங்கானாவின் மேடக் மாவட்டத்தில் உள்ள குச்சன்பள்ளி பகுதியை சேர்ந்தவர் நரசிங்க கவுட் (வயது 36). இவர் தனது தாய் லட்சுமி (57), மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவர் வாடகைக்கு கார் ஓட்டி வந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை நரசிங்க கவுடுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனே அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து மகன் இறந்த செய்தியை கேட்ட தாயார் லட்சுமியும் திடீரென மயக்கம் அடைந்து விழுந்தார். உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு லட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இந்நிலையில் மகனும், தாயும் ஒரே நாளில் மாரடைப்பால் உயிரிழந்திருக்கும் சம்பவம்  அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்