நாட்டின் எல்லை பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளில் 3595.06 கி.மீ நீளத்திற்கு புதிதாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன - மத்திய அரசு

கடந்த 5 வருடங்களில், அண்டை நாடுகளுடனான எல்லையில், 3595.06 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.;

Update: 2022-07-25 15:23 GMT

புதுடெல்லி,

இந்தியாவின் அண்டை நாடுகளுடனான எல்லையில் கடந்த 5 வருடங்களில், புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள சாலைகள் விவரம் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பாதுகாப்பு துறை இணை மந்திரி அஜய் பட் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;-

நாட்டின் எல்லை சாலைகள் அமைப்பின் மூலம் கடந்த 5 வருடங்களில், இந்தியாவின் அண்டை நாடுகளுடனான எல்லையில், 3595.06 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிதாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான மொத்த செலவு ரூ.20767.41 கோடி ஆகும்.

அதிகபட்சமாக இந்தியா - சீனா எல்லையில் 2088 கிலோ மீட்டர் நீளத்துக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான செலவு ரூ.15477.06 கோடி ஆகும். அதே போல, இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் 1300 கிலோமீட்டர் நீளத்திற்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான செலவு ரூ.4242.38 கோடி ஆகும்.

இந்தியா - மியான்மர் எல்லையில், ரூ.882.52 கோடி செலவில் 150 கிலோமீட்டர் நீளத்திற்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்திய - வங்காளதேச எல்லையில், ரூ.165.45 கோடி செலவில் 19 கிலோமீட்டர் நீளத்திற்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்