அரியானாவில் பூட்டிய வீட்டுக்குள் 700 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் பறிமுதல்

பூட்டிய வீட்டுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-08-07 23:32 GMT

சண்டிகர்,

அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள நானு குர்த் என்ற கிராமத்தில் பூட்டிக் கிடந்த ஒரு வீட்டிற்குள் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறை ஆய்வாளர் சந்தீப் குமார் தலைமையில், போலீசார் அந்த வீட்டிற்குச் சென்று சோதனை நடத்தினர்.

மாஜிஸ்திரேட் முன்னிலையில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில், போலீசார் வீட்டிற்குள் சென்று சோதனை நடத்தினர். முழு சோதனையும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. இந்த சோதனையின்போது மொத்தம் 762.15 கிலோ போதைப்பொருளை அந்த வீட்டில் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக அந்த வீட்டின் உரிமையாளர் ராம் சிங் என்ற நபரை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினார். ஆனால், அந்த வீடு சில ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருந்ததாகவும், அங்கு யாரையும் வாடகைக்கு அமர்த்தவில்லை என்றும் ராம் சிங் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். தொடர்ந்து இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்